பரபரப்பு - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை..!
woman sucide in central railway station
சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் என்றால் அது சென்ட்ரல் ரயில் நிலையம் தான். இந்த ரயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் இந்த ரயில் நிலையத்தை கடக்காமல் பணிக்கு செல்ல முடியாது.

இந்த நிலையில், இந்த இடத்தில் இன்று காலை மிகவும் பயங்கரமான சம்பவம் ஒன்று அரங்கேறிவுள்ளது. அதாவது, மக்கள் அதிக அளவில் கூடும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையறிந்த ரெயில்வே போலீசார் உடனே சென்று அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட பெண் யார்? என்ன காரணம்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
woman sucide in central railway station