விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவன்.. மனைவி செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


கணவன் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிராஜா. இவருக்கு வினோதினி  என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்ப்பட்ட தகராற்றால் வினோதினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில், கடந்த 18 ந் தேதி, மணிராஜா வினோதினிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வினோதி மன உளைச்சலில் இருந்த கூறப்படுகிறது.

இதனை அடுத்து,  வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide Due to husband gave the divorce notice


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->