பவளத்தனூர் ஏரியில்  இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு..கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?  - Seithipunal
Seithipunal


சேலம்,தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தனூர் ஏரியின் இருபுறமும் கொட்டப்படும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,ஆகவே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலமத்தில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் பவளத்தானூர் ஏரி அமைந்துள்ளது.  இந்த ஏரி பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும். முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்தது.

அப்பகுதியை சேர்ந்த கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், தண்ணீர் அருந்த செய்வதற்கும் ஏற்ற ஏரியாக இருந்து வந்தது. மேலும் அப்பகுதியின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் காலப்போக்கில் பவளத்தானூர் ஏரி உரிய முறையில் தூர்வாராமல் விடப்பட்டுள்ளதாலும், தாரமங்கலம் நகரத்தில் இருந்து வரும் கழிவு நீர் கலப்பாலும், புதர் மண்டியும்,  ஆகாயத்தாமரைகள் ஏரி முழுவதும் சூழ்ந்துள்ளதால் நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, ஏரியின் இருபுறமும் பல்வேறு இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியின் கரையை ஒட்டி மக்கும், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறந்த விலங்கினங்கள் அனைத்தும் இந்த ஏரியில் போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதி பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை மூடியவாறு பெரும் சிரமத்துக்குள்ளாகி இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.. 

மேலும் மேலும் தாரமங்கலம், சேலம் பிரதான சாலையாகவும், தாரமங்கலம் நகரின் முக்கிய பகுதியான இந்தக் ஏரியில் குப்பை கொட்டுவதை உடனடியாக தடுத்து ஏரியை தூர்வாரி,  சாலை ஓரத்தில் பூங்கா அமைக்க வலியுறுத்தி பொது மக்களை நோய் தொற்று இருந்து காப்பாற்றி சுகாதாரத்தை பாதுகாக்கவும்  மாவட்ட நிர்வாகமும், துறை சார்ந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சசிகுமார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will the district administration notice the health disruption caused by meat and medical waste in the Pavalanthaanur lake?


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->