சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கிடைத்த கவுரவம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் வனகிராம மக்களின் ஒத்துழைப்பாலும், வனத்துறைப் பணியாளர்களின் கடுமையான உழைப்பாலும்தான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு புலிகள் பெருக்கத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

உலக புலிகள் தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் இருக்கின்ற 50 புலிகள் காப்பகங்களில் புலிகள் பெருக்கத்திற்கான தேசிய விருதை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கியுள்ளார்.

இந்த விருதை சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான நாகநாதன் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், விறகு சேகரித்தல், கால்நடைகள் மேய்த்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதால் வனப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்து இருக்கிறது.

இதையடுத்து புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது, சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது என்றும், இந்த காரணத்தினால்தான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.    

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wildlife park in sathyamangalam


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal