மதுரை || வெளிநாட்டில் உயிரிழந்த கணவர் - உடலைக் மீட்டுத்தர கோரி குழந்தைகளுடன் கதறும் மனைவி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். குடும்ப சூழல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின், தன்னை அழைத்துச்சென்ற கம்பெனியில் எந்த வேலையும் கொடுக்கவில்லை என்று வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். 

இருப்பினும், தான் கேட்ட வேலை கிடைக்காததால், கிடைத்த வேலைக்கு சென்ற வீரத்தேவன் அவ்வபோது மனைவியிடம் வீடியோ காலில் பேசும்போது கடுமையான பனிப்பொழிவால் வேலை செய்ய முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வீரத்தேவனின் மனைவி அவரை வழக்கம் போல செல்ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார். 

ஆனால், அவர் அழைப்பை எடுக்காததால், உடன் இருப்பவர்களுக்கு அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, வீரதேவன் பணிக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் பதறிய வீரத்தேவனின் மனைவி மதுரை கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, “என் கணவர் அர்மேனியாவுக்குச் சென்று சிக்கிக்கொண்டு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர். 

அவரது நிலை குறித்து தெரியவில்லை” என்று புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, அர்மேனியாவில் வீரதேவனுடன் இருந்தவர்கள் லட்சுமிக்கு அழைத்து உங்களது கணவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து லட்சுமி வீரத்தேவனை வேலைக்கு அனுப்பி வைத்த தரகரிடம் பேசியபோது, "அவர் மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, வீரதேவனின் மனைவி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife complaint husband body rescue from foreign country


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->