வருடத்தில் ஒரு நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடல்.! இதற்குப் பின் இப்படி ஒரு காரணமா.?! - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயர் ஆட்சியில் பாரிமுனை, ஜார்ஜ் டவுன் மற்றும் பூக்கடை பகுதிகளுக்கு இடையில் 107 ஏக்கரில் கட்டப்பட்டதுதான் சென்னை உயர்நீதிமன்றம். எனவே இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை இருக்கும். உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்வது மிக தூரமாக இருப்பதால் பொதுமக்கள் உயர் நீதிமன்ற வளாக வழியாகவே செல்லத் துவங்கினர்.

இதை கவனத்தில் கொண்டுவந்த நீதிமன்றம் வரும் காலங்களில் இந்த வழி பாதைகளை மக்கள் உரிமை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் அனைத்து வாயில்களும் மக்கள் செல்லாத வகையில் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை நடைமுறை படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வார சனிக்கிழமையில் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும். அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும்.

வாயிகள் மூடப்பட்டு இருக்கும் நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என்று யாருக்கும் நுழைய அனுமதி இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Madras High court always closed on December


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->