தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர்யார்? திமுக அரசின் மக்கள் அதிருப்தி! திமுகவிற்கு சான்ஸ் இருக்கா.. சுடசுட வெளியான கருத்துக் கணிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அக்னி நியூஸ் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மக்களிடையே திருப்தி அதிகமாக உள்ளதைக் காட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் 21,150 பேர் பங்கேற்றனர். இதில் 49% பேர் திமுக அரசின் செயல்பாடுகளில் முழுமையான திருப்தியை தெரிவித்துள்ளார்கள். மேலும் 17% பேர் சில அம்சங்களில் மட்டும் திருப்தி அடைந்துள்ளதாகவும், 34% பேர் மட்டுமே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில், தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக தலைமையிலான கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதிமுக கூட்டணி 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அக்னி நியூஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துல்லியமான முடிவுகளை முன்கூட்டியே கணித்தது இந்த நிறுவனமே என்பதாலும், தற்போது வெளியான கணிப்பு அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை, வரும் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக அரசு உளவுத்துறை மூலமாக ஐந்து கட்டங்களில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எந்தெந்த தொகுதிகள் திமுகவுக்கு வலிமையானவை, எந்த பகுதிகளில் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன, யாருக்கு எதிர்ப்பு அதிகம் என போன்ற விவரங்கள் வகுக்கப்பட உள்ளன.

இந்த கணிப்பின் முடிவுகள், திமுகவின் எதிர்கால தேர்தல் வியூகங்களை தீர்மானிப்பதற்கும், வாக்குறுதிகளை வடிவமைப்பதற்கும் முக்கியமான தரவுகளாக பயன்பட உள்ளன.

அத்துடன், இந்த அரசியல் நிலவரம் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது நிலையை வலுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. அக்னி நியூஸின் சமீபத்திய கருத்துக் கணிப்பு, தமிழகத்தில் திமுகவின் அரசியல் செல்வாக்கு தற்போது உறுதியாக உள்ளது என்பதற்கான புதிய சான்றாக உருவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will be the next Chief Minister of Tamil Nadu People are dissatisfied with the DMK government Does DMK have a chance Opinion poll released today


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->