2024 மீலாது நபி எப்போது?.....தலைமை காஜி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் 17-ம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று,  தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.


இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இஸ்லாமிய மாதமான ரபியுல் அவ்வல் மாத பிறை நேற்று தென்படவில்லை.

இந்த நிலையில், ரபியுல் அவ்வல் மாதம் நாளை தொடங்கும். இதனால், நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா, வரும் 17-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.


இதற்கிடையே சிறு வயதிலியேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When is 2024 Miladu Nabi Chief Qazi Announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->