சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்வு! -தென்பெண்ணை ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் தற்போது அணை ஒழுங்குமுறை விதிகளின்படி வினாடிக்கு 2000 கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பருவமழை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவதாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடிக்கும் அதிகமான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், இன்று மதியம் 12 மணிக்குள் சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடி வரை நீர் வெளியேற்றப்படலாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மேல்பகுதிகளில் தொடரும் மழையையும், மேல்அணைகளிலிருந்து வரும் நீரின் அளவையும் பொருத்து, சாத்தனூர் அணையின் நீர் வெளியேற்றம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, மீன்பிடிக்கவோ, குளிக்கவோ கூடாது என மக்கள் பாதுகாப்பிற்காக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water level rises Sathanur Dam Warning issued people along Thenpennai River


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->