பறவைக் காய்ச்சல் எதிரொலி - தமிழக மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லுார் பகுதியில், கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களில், 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. 

இந்த நிலையில், தமிழகத்தில், ‘எச்5என்1’ என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில், "கோழிகள், காட்டு பறவைகள் மற்றும் அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில், பறவை காய்ச்சல் பாதிப்பு பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தலைவலி, கை, கால் தசைபிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாகும். 

எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை வைரஸால் பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் மனிதர்கள் குறித்து தகவல், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். 

பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருத்தல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முககவசம் கட்டாயம் அணிதல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warning to tn districts for birds fever


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->