வரதட்சணையாக இருட்டுக்கடை வேண்டும்.... மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர்!!! -குமுறும் ஓனர் மகள்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக 'இருட்டுக்கடை அல்வா' திகழ்ந்து வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் கவிதா சிங். என்பவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு நெல்லையில், கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் இன்று அவர் நெல்லை மாநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில், 'தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும்' தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.

கனிஷ்கா:

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா தெரிவித்ததாவது,"எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையிலுள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன்.

எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் தெரிவித்தால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன்.

பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும்.

இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க காவலர்களிடம் புகார் மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wanting iruttukadai shop dowry Groom family tortures owner daughter angry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->