வாக்காளர் பட்டியல் திருத்தம்! இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி
Voter list revision Election Commission takes action in todays consultative meeting
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் கடைசியாக எப்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது என்பதற்கான விவரங்களை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.
இதனிடையே,இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு குறித்து விரிவான விவாதம் நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்தின் பணிநிலை பற்றியும் தலைமை அதிகாரிகள் நேரடியாக விளக்கம் அளிக்க இருக்கின்றனர்.
இதற்கு முன்பு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திருத்தத்தில், 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Voter list revision Election Commission takes action in todays consultative meeting