மாவட்ட வளர்ச்சிக்காக ரூ.25 ஆயிரம் நிதி வழங்கிய 3 ஆம் வகுப்பு மாணவர்.. பாராட்டிய ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை, 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியை சார்ந்தவர் பிரபாகர். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹேம கார்த்திக் (வயது 8). கார்த்திக் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், தனது உண்டியல் சேமிப்பு நிதியான ரூ.20 ஆயிரம், பெற்றோர் வழங்கிய தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை சேமித்து, மொத்தமாக ரூ.25 ஆயிரம் பணத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டியிடம் வழங்கினார். 

இந்த நிதியை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி, மாணவர் ஹேம கார்த்திக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், ஆங்கில அகராதி உட்பட பல புத்தகத்தையும் சிறுவனுக்கு பரிசாக வழங்கி மகிழ்ச்சியுற வைத்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Child Give Donation for District Improvement


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal