காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பரபரப்பு: தென்கலை, வடகலை பிரிவினர் கடும் மோதல்..!
Violent clash between vadakalai and thenkalai sects at Kanchipuram Varadaraja Perumal Temple
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் மீண்டும் ஸ்தோத்திரம் பாடல்கள் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இக்கோயிலில் நடைபெறும் துப்புல் வேதாந்த தேசிகர் மங்கள சாசன உற்சவத்தில் வேதாந்த தேசிகர் முன்பு ஸ்தோத்திரம் பாடல்கள் பாடுவது மரபு.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற வைபவத்தில் வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார் வடகலை பிரிவினரும் ஸ்தோத்திரம் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து பெண்களின் பிரிவினரும் ஸ்தோத்திரம் பாடல் பாட முற்பட்டனர்.

இதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்தோடு, அனுமதி அளித்தது ஏன் என்று கேட்டு கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமியோடு வாக்கு வாதம் செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் போலீசார் அவர்களை சமாதானம் படுத்த முயன்றுள்ளனர்.
முன்னதாக தென்கலை பிரிவினர் ஸ்தோத்திரம் பாட கடந்தாண்டே தடை தேசிகர் சாட்சி முறை உற்சவத்தின் போது கோயில் நிர்வாகம் தடை விதித்ததாக சுட்டிக்காட்டி, வடகலை பிரிவினர் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக கூறியதை ஏற்காதவர்கள் நீதிமன்றத்தை நடப்போவதாக கூறியுள்ளதோடு, பெண்கள் பிரிவினர் பாடல்கள் பாடாமல் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Violent clash between vadakalai and thenkalai sects at Kanchipuram Varadaraja Perumal Temple