பணத்தின் மீது மோகம்.. பாசமான மனைவி துடிதுடிக்க உயிரை விட மூலக்காரணமாக இருந்த உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி திருவம்பட்டு கிராமத்தை சார்ந்தவர் குப்பன். இவரது மகன் அன்பழகன். அன்பழகனின் மனைவி செல்வி (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 வருடம் ஆகும் நிலையில், அன்பழகன் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளான். 

மேலும், கடந்த 11 ஆம் தேதியன்று உறவினர்களின் தூண்டுதலை அடுத்து, மீண்டும் அன்பழகன் தகராறு செய்யவே, செல்வியை அத்தூராக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்து போன செல்வி, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த பெண்மணி, சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து செல்வியின் தாய் ராஜேஸ்வரி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் அன்பழகன், அவரது சகோதரர் ஆறுமுகம் மற்றும் மாரிமுத்து, உறவினர் வடமலை, தேசம்மாள் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viluppuram women suicide due to Dowry Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->