விழுப்புரம்: பெண் காவல் அதிகாரியை ஏமாற்றிய காவலர்.. வலைவீசி தேடும் காவல்துறை..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் கிராமத்தை சார்ந்த இராமச்சந்திரன் என்பவரின் மகன் அருள் (வயது 32). இவர் விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். செஞ்சியை சார்ந்த 26 வயது இளம்பெண்ணொருவர், சென்னையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவரும் சென்னையில் ஒரே பணியிடத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலமாக நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வரவே, தனியாக வீடு எடுத்தும் கணவன் - மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில், அருள் விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிட மாறுதலாக வந்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பெண்மணி விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் இராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், " அருள் என்பவரும், நானும் 6 வருடமாக காதலித்து வந்தோம். இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில், எங்களின் காதல் எங்களின் குடும்பத்தினருக்கும் தெரியும். இந்த நிலையில், மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ள போகிறார். அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து, தலைமறைவாக உள்ள அருளை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Gingee lady cop sexual abuse and cheat by Police Officer


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal