விழுப்புரம் (தனி) யாருக்கு.? வரலாற்றை புரட்டிப் போடும் தேர்தல்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் தனி தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வன்னியர் மக்களும், பட்டியலின மக்களும் சம அளவில் வாழும் தொகுதியாக பார்க்கப்படும் விழுப்புரமானது திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திண்டிவனம் மற்றும் வானூர் தனி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

இதனால் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. விழுப்புரம் தனி தொகுதியாக மறுசீரம் வைக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர். 

ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை சுமார் 11% வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை பொதுத் தேர்தலில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டியின் நிலவுகிறது. விழுப்புரம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக சார்பில் கந்தளவாடி பாக்யராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதேபோன்று திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளார். 

அதேபோன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விழுப்புரம் தனி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாததால் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மற்றும் வேட்பாளரை பொருத்தே அத்தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram Loksabha constituency full details


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->