எஸ்.ஐ.ஆர். பணி முடிந்தது: ‘யாரும் தவறாமல் வாக்களிக்க!’ - மறுசரிபார்ப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்
SIR work completed Everyone should vote regularly Political parties intensify review
தமிழகத்தில் 2002-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. 2026 ஜனவரி 1-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடன், இந்திய தேர்தல் ஆணையம் இந்த மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணிகள் நவம்பர் 4-ம் தேதி தமிழகத்திலெங்கும் தொடங்கின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாக வீடு தேடி சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கினர். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் அவற்றை பெற்றுக்கொண்டு இணையதளத்தில் டிஜிட்டல் பதிவேற்றம் செய்வதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இந்தப் பணிகள் இன்று (11ம் தேதி) அதிகாரப்பூர்வமாக முடிவடைகின்றன.இதுவரை படிவத்தை நிரப்பாதவர்கள் – இன்றே வழங்க வேண்டிய இறுதி சந்தர்ப்பம்!
அதிகாரபூர்வ எண்கள்: மாநிலம் முழுவதும் சுமார் பூரண சாதனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில்:
மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள்: 6,41,14,587
வழங்கப்பட்ட படிவங்கள்: 6,41,10,380 (99.99%)
இதுவரை படிவம் நிரப்பாதவர்கள்: மொத்தம் 4,207 பேர் மட்டும்
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவை: 6,40,83,413 (99.95%)
இந்த மிகப்பெரிய பணிக்காக:
68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்
2.46 லட்சம் அரசியல் கட்சி முகவர்கள் இணைந்து பணிபுரிந்தனர்
அடுத்த கட்டம் என்ன?
இன்று எஸ்.ஐ.ஆர். பணி நிறைவடைந்ததும்:
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சம்பந்தப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்கப்படும்.
அவர்கள், ஒவ்வொரு தகுதியுள்ள வாக்காளரும் பட்டியலில் உள்ளார்களா? யாராவது தவறவிட்டார்களா? என்று மறுசரிபார்ப்பை மேற்கொள்வார்கள்.
English Summary
SIR work completed Everyone should vote regularly Political parties intensify review