கிராம நிர்வாக அதிகாரி திடீர் தற்கொலை! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர், உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கருப்பசாமி அவரது சொந்த ஊரான கோமங்கலம் அடுத்துள்ள கூல நாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பசாமி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

village administration officer commits suicide


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->