தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல்.. எப்போது தெரியுமா? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிப்பாணை இன்று வெளியாக உள்ளது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான அரசாணையை வெளியிடுகிறார். 

நாடு முழுவதும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் அதற்கான அறிவிப்பு பானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிப்பை இன்று வெளியாகிறது. 

அதே வளையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக திடீரென உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 7ம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் மே 7ஆம் தேதி விக்ரமாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi byelection date announced May7


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->