கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டே வழிதான் உள்ளது.! விஜயபாஸ்கர் ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த ஊரடரங்கில் அனாவசியமாக மக்கள் வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது.

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 64,603 ஆக இருக்கின்றது. அதுபோலவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக இருக்கின்றது. 

மேலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்," கண்ணுக்கு தெரியாத வைரஸான கொரோனாவை எதிர்த்து அனைவரும் போராடிக் கொண்டு இருக்கின்றோம். 

அதனை தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள்தான். வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். வீட்டிற்கு வரும் போது கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனை கட்டுப்படுத்த முக்கியமாக இருக்க வேண்டியது சுய கட்டுப்பாடு தான். மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். நாம் ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற தடுப்பூசி மற்றும் மருந்தே இல்லாத கொடிய வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் எனில் அதற்கு சுய கட்டுப்பாடு மிக மிக முக்கியம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijaybasker tweet about solution for corona spread 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->