ஒடிசா ரயில் விபத்து | ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் - விஜயகாந்த் போர்க்கொடி!
Vijayakanth Say Railway Minister resign for Odisha Train Crash
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் அனுதாபத்தையும் மருத்துவமனையில் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் சிகிச்சை பெற்று விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அரசு உடனடியாக கண்டறிந்து வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்" என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Vijayakanth Say Railway Minister resign for Odisha Train Crash