விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்! அரசியலில் விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: பிரேமலதா பேட்டி
Vijayakanth birthday celebration No one can fill Vijayakanth place in politics Premalatha interview
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை, அக்கட்சி வழக்கம்போல் “வறுமை ஒழிப்பு தினம்” எனக் கொண்டாடியது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏழை மற்றும் எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜயை பற்றியும் கருத்து தெரிவித்தார்.
“இப்போது தான் விஜய் பெரியவராகத் தெரிகிறார். ஆனால், அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து பார்த்து வருகிறோம். எனக்குப் பார்த்தால் அவர் மகன் போன்றவர். அவருக்காக விஜயகாந்த் ‘செந்தாரபாண்டி’ படத்தில் நடித்துத் தந்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார், அதற்கு வாழ்த்துகள். ஆனால், அந்த படத்தை அரசியலுக்காக பயன்படுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிப்பது, தே.மு.தி.க.யின் முக்கிய பாரம்பரியமாகும். ஒவ்வொரு ஆண்டும் இதையொட்டி ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவது வழக்கம்.
English Summary
Vijayakanth birthday celebration No one can fill Vijayakanth place in politics Premalatha interview