விஜயின் மாஸ்டர் பிளான்! ராகுல் காந்தியை சந்திக்கும் விஜய்..? உடையும் திமுக கூட்டணி! தவெக-காங்கிரஸ் கூட்டணி? - Seithipunal
Seithipunal


“நாம்தான் ராகுல் காந்தியை சந்திக்கப் போகிறோமே…” என்று அரசியல் கணக்கீட்டை விஜய் போட்டிருக்கலாம். ஆனால், அந்தச் சந்திப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதில் இன்னும் தெளிவில்லை. இருப்பினும், விஜய்யின் அரசியல் நகர்வுகளில் இது ஒரு முக்கியமான கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளில், திமுகவுக்கு கடுப்பாகத் தோன்றும் வகையில் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், காங்கிரஸ் உடன் கூட்டணி உருவாக்கும் நோக்கில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில், விஜய் பாஜக மற்றும் திமுகவை கடுமையாகத் தாக்கினார். பின்னர் மதுரையில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டிலும் திமுக, பாஜக, அதிமுக ஆகியவற்றை விமர்சித்தார். ஆனால் காங்கிரஸை பற்றி எங்கும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“காங்கிரஸ் என்பது ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த கட்சி. அவர்கள் 10 வருடங்களுக்கு முன் செய்த செயல்களை இப்போது பேசிக் கொண்டிருப்பதில் அவசியமில்லை” என விஜய் நினைத்து இருக்கலாம். அதனால் காங்கிரஸை விமர்சிக்காமல் விட்டது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது உறுதியான காங்கிரஸ்–திமுக கூட்டணியை சிதைக்கவே சில காங்கிரஸ் எம்.பிக்கள் பின்னணியில் செயல்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பிக்கள், “விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வேண்டும்” என்ற எண்ணத்தில் தீவிரமாக செயல்படுகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதனால், விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வு காங்கிரஸுடன் தொடர்புடையதாக இருக்குமா? அல்லது இது வெறும் அரசியல் பாசாங்காக முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay master plan Vijay to meet Rahul Gandhi DMK alliance to fall apart tvk Congress alliance


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->