விஜய்க்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியில்லை எல்லாத்துக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தான் காரணம்! – நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னர், நடிகர் தாடி பாலாஜி இன்று கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயின் அணியின் இரண்டாம் கட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.

தாடி பாலாஜி கூறியதாவது:
“கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர், அதில் குழந்தைகள் கூட உயிரிழந்தது மிகவும் வேதனையானது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் மனம் பதறியது. எனக்கும், உங்களுக்கும் என்ன மனவேதனை இருக்கிறதோ அதே மனவேதனை விஜய்க்கும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்.

கரூர் மக்களை மதித்ததால்தான் இன்று அவர்களைச் சந்திக்க வந்தேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். என் தலைவர் விஜய்க்காகத்தான் வந்தேன். அவர் இப்படியான ஒரு துயரச் சம்பவம் நடைபெறும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

விஜய்க்கு 100 சதவீதம் எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்தச் சம்பவம் அவருக்கு ஒரு பாடமாக இருக்கும். பிரச்சார மேடை, இட வசதி, நேரம் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள்தான். அவர்கள் விஜய்க்கு முறையான அறிவுறுத்தலை அளிக்க வேண்டும்.

விஜய் ஒரு நேர்த்தியான நபர். ஷூட்டிங் 7 மணிக்கு என்றால் 6.30 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பார். அவர் தாமதமாக வந்ததற்காக குறை கூற முடியாது. அவர் தனது அணியினரின் அறிவுறுத்தல்களைக் கேட்டுதான் வருகிறார்.

இரண்டாம் கட்ட தலைவர்கள் – புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார் – இவர்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது. புதியவர்கள் அல்ல. இருந்தும், அவர்கள் பொறுப்புடன் நடக்கவில்லை.

விஜய் வெளியிட்ட வீடியோவிலும் ‘என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், அங்கே கூட அவர் தனது அணியினரை வெளிப்படையாகப் பேச விடவில்லை. இது வருத்தமாக உள்ளது,” என தாடி பாலாஜி தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து இவ்வாறு பேசிய தாடி பாலாஜியின் கருத்துகள், விஜயின் அரசியல் அணியின் உள்நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay is not happy with the second tier leaders it all because of Pussy Anand and Aadhav Arjuna Actor Dadi Balaji alleges


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->