மாநாட்டில் கமலை சீண்டிய விஜய்! என் பெயரை சொல்லவில்லை..விஜய் எனக்கு தம்பி..விஜய் பேச்சுக்கு கமல்ஹாசன் சொன்ன கதை! - Seithipunal
Seithipunal


மதுரை – தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பேசிய கட்சித் தலைவர் விஜய், “நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, சிலர் வருவார்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால், அவர்கள் வரவில்லை. நான் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம்பிடித்த பிறகே அரசியல் கட்சியை தொடங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

விஜயின் இந்தப் பேச்சு, அரசியலுக்கு வருவேன் எனக் கூறிவிட்டு வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்தையும், வயதான பிறகு கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசனையும் குறிக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவர் என் பெயரை சொன்னாரா? அல்லது வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா? அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் எனக்குத் தம்பி” என்று சுருக்கமாக பதிலளித்தார்.

விஜயின் மறைமுக குறிப்பு மற்றும் கமல்ஹாசனின் சாடல் பாணி பதில், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay insulted Kamal at the conference Didnot say my name Vijay is my brother The story Kamal Haasan told about Vijay speech


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->