புஸ்ஸியை விஜய் கண்டுகொள்ளவே இல்லையாம்! புஸ்ஸியை லெப்ட் ஹேண்டில் ஒதுக்கி தள்ளிய விஜய்..தவெகவில் சலசலப்புகள் ஆரம்பம்! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் 38 குடும்பங்கள் சென்னைக்கு வந்து விஜய்யைச் சந்தித்தன. இதற்காக மொத்தம் 46 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, குடும்பத்தினர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

விஜய் காலை 10 மணியளவில் குடும்பங்களுடன் சந்திப்பைத் தொடங்கியார். மாலை 6.30 மணி வரை நீடித்த இந்த சந்திப்பில், ஒவ்வொரு குடும்பத்தாரும் தனித்தனியாக விஜய்யைச் சந்தித்து பேசினர். ஒரு குடும்பத்துடன் சராசரியாக அரை மணி நேரம் நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது.

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 16 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது. அப்போது அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறியிருந்தாலும், அந்தச் சம்பவத்திற்குப் பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்தது இதுவே முதல்முறை.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவரின் தகவலின்படி,“விஜய் சார் நம்மைக் கண்டதும் மனமுவந்து பேசினார். கரூர் வர முடியாததற்கு மன்னிப்பு கேட்டார். ‘நான் உங்கள் சகோதரன் மாதிரி இருக்கேன். உங்களுக்கு வேலை வேணும்னா அல்லது இடமாற்றம் வேணும்னா சொல்லுங்க — நிச்சயம் செய்யறேன்’ன்னு சொன்னார்,”
என்று கூறியுள்ளனர்.

மற்றொரு குடும்பத்தினர்,“எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்க சொல்லினார். ஆனா குழந்தைகளை இழந்த நிலையில் எதையும் கேட்க மனமில்லை. அவர் அளித்த ஆறுதல் நம்ம மனசுக்கு பெரிய ஆதரவாக இருந்தது,”
என்று தெரிவித்தனர்.

முன்னதாக விஜய், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்தத் தொகை ஏற்கனவே குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், விஜயின் நெருங்கியவர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றிருந்தாலும், அவருக்கு சிறிது ஒதுக்கீடு நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜய், கட்சியின் கட்டமைப்பில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் ஆனந்தின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளார் என்பதும், இதனால் இருவருக்கும் இடையில் சிறிய மனக்கசப்பு நிலவுகிறது என்பதும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வமாக விஜயின் தரப்பில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தச் சந்திப்பு முழுவதும் மிகுந்த அமைதியுடனும் மரியாதையுடனும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சமூக வலைதளங்களில், “விஜயின் மனிதநேயம், தாழ்மை பேசாமல் செயலில் தெரிகிறது” என ரசிகர்கள் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay didnot even notice Pussy Vijay pushed Pussy aside with his left hand The commotion started in Thaveka


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->