இளம்பெண்கள் டார்கெட்.. குளியல் வீடியோ எடுத்து சீரழித்து மிரட்டி வருமானம்?.. காட்பாடி சைக்கோ காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


காட்பாடி அருகே இளம்பெண்களை குறிவைத்து குளியல் வீடியோ எடுத்து மிரட்டி சீரழித்து வருமானம் பார்த்த காமுகன் கைது செய்யப்பட்டு இருக்கிறான். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்தவன் ஆடம்ஸ் (வயது 45). இவன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இவனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி ஆடம்ஸ் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, பக்கத்து வீட்டினை சார்ந்த இளம்பெண் குளிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளான். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி கூச்சலிடவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் இளம்பெண்ணின் பெற்றோர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து, ஆடம்ஸ் சிக்கினால் நம்மை பொளந்துகட்டிவிடுவார்கள் என்று எண்ணி தப்பி ஓடியுள்ளான். 

பின்னர், மறுநாள் காலையில் ஆடம்ஸ் ஆட்டோவில் வீட்டிற்கு வரவே, இதனைக்கண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் அவனை பிடிக்க முயன்றுள்ளனர். அவன் வீட்டிற்குள் சென்று கதவை உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளான். 

ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் ஆடம்ஸின் ஆட்டோவை கீழே தள்ளி அடித்து நொறுக்கினர். பின்னர் இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் இருந்த ஆடம்ஸை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

காவல் துறையினர் காமுகன் ஆடம்ஸின் அலைபேசியை சோதனை செய்கையில், 15 பெண்கள் குளிக்கும் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. மேலும், இளம்பெண்கள் குளிக்கையில் ஆடம்ஸ் அதனை வீடியோ எடுத்து பார்த்து ரசித்து வந்ததும் அம்பலமானது. 

காமுகன் ஆடம்ஸ் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பார்க்கும் சைக்கோ குணம் கொண்டவன் என்றும் கூறப்படும் நிலையில், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழியின் அடிப்படையில், உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கும் சூழலாக கைதாகி இருக்கிறான். ஆடம்ஸின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், ஆடம்ஸ் இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்த வீடியோக்களை பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Katpadi Ambedkar Nagar Culprit Adams Sexual Abused 15 More Young Woman and Capture Bath Video


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal