கருணை இல்லம் என்ற பெயரில் முதியோர்களை அடித்து துன்புறுத்தல் - மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!
Vellore Joseph old house tortured old man's
வேலூர் மாவட்டம் குகையநல்லூர் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்காக புனித ஜோசப் கருணை எல்லாம் இயங்கி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் புகார்கள் எழுந்து வந்தஸநிலையில் 2018 ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் முதியோர்களை அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு நடத்த வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டதில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியது நிரூபணமாகி உள்ளது
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த 69 முதியவர்களை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது புனித ஜோசப் கருணை இல்லத்தை பூட்டி சீல் வைக்கும் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கருணை இல்லம் என்ற பெயரில் முதியவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Vellore Joseph old house tortured old man's