வேலூர் கள்ளக்காதல் ஜோடி பாண்டிச்சேரியில் தூக்கிட்டு தற்கொலை.. 22 வயது ஆண், 26 வயது பெண் சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த பெண்மணி, திருமணம் முடியாத இளைஞருடன் கள்ளக்காதல் வயப்பட்டு, இறுதியில் இருவரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் தெருவில் இருக்கும் தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் வாலிபர் இளம்பெண்ணுடன் வருகை தந்தார். அவர் தங்க அறை கேட்ட நிலையில், தனது பெயர் மோகன் ராஜ் என கூறி, ஆதார் எண்ணையும் வழங்கியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு தங்கும் விடுதியில் 3 ஆவது தளத்தில் அரை ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாலை நேரத்தில் வெளியே சென்று சுற்றிப்பார்த்து ஜோடி, இரவு நேரத்தில் விடுதியறைக்கு வந்துள்ளது. பின்னர், மீண்டும் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்களின் அறையில் எந்தவிதமான நடமாட்டமும் இல்லை. இதனால் விடுதி ஊழியர்கள் பெரியகடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் தலைமையிலான காவல் துறையினர் மாற்று சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அறைக்குள் சென்ற அதிகாரிகள் மற்றும் விடுதி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக, இளம் ஜோடி மின்விசிறியில் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர்களின் உடலை கீழே இறக்கிய அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் சட்டைப்பையில் இருந்த வங்கியின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரசீதை வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், வாலிபர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கருகாம்புத்தூர் புதுத்தெரு பகுதியை சார்ந்த புஷ்பராஜின் மகன் மோகன் ராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. அவருடன் தூக்கில் தொங்கியவர் கருமாம்புத்தூர் மரியம்மன்கோவில் தெரு பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவரது மனைவி நந்தினி (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், மோகன் ராஜுக்கும் - நந்தினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.  

கள்ளக்காதல் ஜோடிகள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விஷயம் நந்தினியின் கணவரான கார்த்திக்கு தெரியவந்துள்ளது. இதனை கார்த்திக் கண்டிக்கவே, கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி இரயில் மூலமாக சென்னை சென்றுள்ளது. பின்னர், புதுச்சேரிக்கு வந்து அறையெடுத்து தங்கி ஊரை சுற்றிப்பார்த்து, நாம் தற்கொலை செய்து மாண்டுவிடலாம் என முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை விட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Illegal Affair Couple MohanRaj and Nandhini Suicide at Pondicherry Lodge Police Investigation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal