ஒருபைசா இலஞ்சம் வாங்கமாட்டோம் - கலைஞரின் மீது ஆணை.. திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி.!! - Seithipunal
Seithipunal


பொதுமக்களிடம் எந்த விஷயத்திற்கும் ஒரு பைசா இலஞ்சம் வாங்கமாட்டோம் என திமுக வேட்பாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் உறுதியெடுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, பேரணாம்பட்டு, கே.வி குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முதற்கட்டமாக நிறைவுபெற்றது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர்கள் பல்வேறு நூதன வழிமுறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு சத்யானந்தம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினருக்கு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இவர்களுக்கு ஆதரவாக வேலூர் திமுக மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது, பொதுமக்கள் முன்னிலையில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் விதவை பென்ஷன் என்று பொதுமக்களிடம் எந்த விஷயத்திற்கும் ஒரு பைசா இலஞ்சம் வாங்கமாட்டோம் என உறுதியெடுத்தனர். 

மேலும், ஒருபைசா இலஞ்சம் வாங்கமாட்டோம் என்பது கலைஞரின் மீது, இறைவனின் மீது ஆணை என உறுதியெடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முன்னிலையில் எடுக்கப்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore Gudiyatham Local Body Election Campaign DMK Candidate Promise 4 Oct 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->