நெல் கொள்முதல் முறைகேட்டில் ரூ.1.5 கோடி சுருட்டிய திமுக பிரமுகர்! அதிகாரிகள் உட்பட 30 பேர் அதிரடி கைது! மாஸ் காட்டும் வேலூர் சிபிசிஐடி! - Seithipunal
Seithipunal


நெல் கொள்முதல் முறைக்கேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த ஓராண்டுக்கு முந்தைய காரீப் பருவத்தின் போது வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முறைகேடாக நெல் கொள்முதல் செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விவசாயிகளிடமிருந்து குறைந்த அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்கு மாறாக வியாபாரிகள் மற்றும் தனியார் ஏஜெண்டுகளையும் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு திமுகவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் உதவியுள்ளனர். வியாபாரிகள் மூலம் பெறப்படும் ஒவ்வொரு நெல மூட்டைக்கும் தலா ஐந்து ரூபாய் கமிஷன் பெற்றுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து தற்பொழுது வரை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி தாலுக்கா சிறுகரும்பூர் பகுதி திமுக கிளைச் செயலாளர் குமரவேல் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கிராம நிர்வாக அதிகாரி குமரவேல் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குமரவேல் பாண்டியன் தனது மனைவி, மகன், உறவினர்கள் பெயரில் போலி சிட்டா, அடங்கல் பெற்று சிறு குறு விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல் மூட்டைகளை வாங்கி அவற்றை சிறுகரும்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு விற்று உள்ளார்.

இந்த முறை கேட்டின் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோன்று கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி குமரவேல் கடந்த 2020 ஆம் ஆண்டு பெருமூச்சு கிராமத்தில் பணியில் இருந்த போது முறைகேடாக பலருக்கு போலி சிட்டா, அடங்கல் வழங்கி பெருமளவு மோசடிக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பல மோசடி பேர்வழிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையால் முறைகேட்டில் ஈடுபட்ட பல அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர். நெல் குளம் கொள்முதல் முறை கேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேலூர் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore CBCID police arrested DMK executive and VAO in pappy procurement scam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->