வாக்குப்பதிவு மையத்திலேயே அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து.. கள்ளஓட்டை தட்டி கேட்கையில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கள்ளஓட்டு போடுவதை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் குடல் சரிந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், அக். 9 ஆம் தேதியான இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, கெங்கநல்லூர் ஊராட்சிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில், கெங்கநல்லூர் ஊராட்சி பகுதியில் 8 ஆவது, 9 ஆவது வார்டுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்போது, ஒருத்தரப்பை சார்ந்த சிலர் கள்ளஓட்டு பதிவு செய்ய முயற்சித்ததாக கூடப்பிருக்கிறது. இதனை நிகழ்விடத்தில் இருந்த அதிமுக நிர்வாகி என்று கூறப்படும் வெங்கடேசன் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். 

இதன்போது, அங்கிருந்த மகாலிங்கம் என்பவருக்கும் - வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு வாக்குவாதமாக முற்றி, இறுதியில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற மகாலிங்கம், கத்தியை எடுத்து வந்து வெங்கடேசனின் வயிற்றில் குத்தியுள்ளார். 

இதனால் குடல் சரிந்த நிலையில் வெங்கடேசன் கீழே சரிந்து விழ, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை உடனடியாக அவசர ஊர்தி உதவியுடன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

பின்னர், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், பதற்றத்தை குறைக்க சம்பந்தப்பட்ட வார்டு மற்றும் கிராம பகுதியிலும் காவல் துறையினர் குவிக்ப்பட்டுள்ளனர்.
  
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Anaikattu Genganallur AIADMK Supporter Murder Attempt in Vote Booth


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal