ஆண்டின் தொடக்கமே முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி... மகிழ்ச்சியில் விவாசியிகள்..!  - Seithipunal
Seithipunal


காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள வீராணம் ஏரியானது, இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

கடலூர் மாவட்டதில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள இந்த வீராணம் ஏரியால், அந்த பகுதியில் விவசாயம் செய்வதற்கும் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஏரி 4 முறை நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின் நீர்மட்டம் குறைந்து கொண்டு வந்தது. இந்த நிலையில், அணைக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 568 கனஅடி வீதம் காவிரி நீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் இன்று 15.6 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக ஏரி நிரம்பியுள்ளது. தற்போது பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, சென்னை குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 74 கனஅடி வீதம் நீர் அனுப்பப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veeram lake filled with water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->