திடீரென செயல்படாமல் போன மைக்கை தூக்கி வீசிய திருமாவளவன்.!
vck leader thirumavalavan throw on mic for not working
திடீரென செயல்படாமல் போன மைக்கை தூக்கி வீசிய திருமாவளவன்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நேற்றிரவு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.
அங்கு மேடையில் விசிக தலைவர் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு மைக் வயர்களை மிதித்துக் கொண்டிருந்தனர். இதனால் வயர் நசுங்கி மைக்குகள் வேலை செய்யாமல் போயுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த திருமாவளவன், கையில் இருந்த மைக்கை தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர் திருமாவளவனுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் இடையூறு இல்லாமல் பேசினார். திருமாவளவன் ஆத்திரத்தில் மைக்கை தூக்கி வீசியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
vck leader thirumavalavan throw on mic for not working