வாணியம்பாடி : அப்துல் ரசாக் மகன், கஞ்சா வியாபாரி மன்னன் இம் தியாஸ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம், வணியம்பாடியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளராக இருந்து வந்தவர்.  வசீம் அக்ரம் கட்சியில் மட்டும் அல்லாமல் சமூக செயலிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வசீம் அக்ரம் கடந்த 10 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வாணியம்பாடி அருகே தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.


இதற்கிடையே வசீம் அக்ரம்-யை வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர் போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கொலை சம்மந்தமாக ட்டேரி பிரசாந்த் என்ற ரவி மற்றும் டில்லி குமார் ஆகிய இரு நபர்களை போலீசார் கைது செய்த நிலையில்,  தலைமறைவாக இருந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்யசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி முதல் குற்றவாளி வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரது மகன் பிரபல கஞ்சா வியாபாரி இம் தியாஸ் (39)  சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளான்.

குற்றவாளியை வருகிற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளியை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிர்ராயில் அடைக்கப்பட்டுள்ளான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaniyampadi murder case main killer arrested


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal