டிரம்ப் எகிப்து செல்லும் முன் ஹமாஸ் வசமுள்ள 20 பிணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்: வான்ஸ் நம்பிக்கை..!
Vance hopes 20 Hamas hostages will be released before Trump visits Egypt
காசாவில் 02 ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது. இதையடுத்து, காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் காசா அமைதி உச்சி மாநாடு நாளை (அக்டோபர் 13) எகிப்தில் நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் எகிப்து உச்சி மாநாட்டுக்காக அதிபர் டிரம்ப் செல்லும் முன்னதாக, தன் வசம் வைத்துள்ள 20 பிணையக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

ஹமாஸ் வசமுள்ள உயிருடன் உள்ள 20 பிணையக்கைதிகளை அடுத்த 24 மணிநேரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மத்திய கிழக்கில் உண்மையான அமைதி நிலவும் உணர்வில் உள்ளோம். நிச்சயமாக இந்த 20 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு, இது ஒரு சிறந்த தருணம் என்று தான் எண்ணுவதாகவும், சாத்தியமாக்கிய அமெரிக்க ராஜதந்திரிகளை நினைத்து அமெரிக்கா பெருமைப்பட வேண்டும் என்றும், உலகிற்கும் இது ஒரு சிறந்த தருணம் என்று தெரிவித்துள்ளார். எனவே தான் அதிபர் டிரம்பும் அங்கு செல்ல உள்ளதாகவும், விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளை சந்திப்பார் என்று துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார்.
English Summary
Vance hopes 20 Hamas hostages will be released before Trump visits Egypt