தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் - வைகோ பேச்சு.! - Seithipunal
Seithipunal


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதியன்று இரவு வீட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன் படி, தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் வைகோ சென்னை அழைத்து வரப்பட்டு, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள இல்லத்தில் தங்கினார். பின்னர் வைகோ நேற்று முன்தினம் மதியம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 "இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து விட்டது; எலும்பு சிறிய அளவில் கீறியுள்ளது. உங்களுக்கு தற்போது ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏறத்தாழ 7,000 கி.மீ நடந்திருக்கிறேன்; ஆனால் கீழே விழுந்ததில்லை.

நெல்லையில் நான் தங்கி இருந்த வீட்டில் நிலைகுலைந்து சாய்ந்துவிட்டேன். எனக்கு தலை, முதுகெலும்பில் அடிபட்டிருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன். நான் நன்றாக இருக்கிறேன்; முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். யாரும் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். முழு நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன். எனது நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko vedio released in hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->