நிலம் யார் பெயரில் உள்ளது? வடலூர் சத்ய ஞான சபை விவகாரத்தில் திடீர் திருப்பம் - தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


வடலூர் சத்ய ஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் யார் பெயரில் உள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் சத்ய ஞான சபைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 27.86 ஏக்கர் நிலத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

மேலும், 34 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்தது.

அப்போது நீதிபதிகள், 34 ஏக்கர் நிலமும் தனிநபர் பெயரில் பட்டா பெறப்பட்டிருந்தால் அது சட்ட விரோதம் என்று தெரிவித்தனர். மேலும் சத்திய ஞான சபை நிலம் குறித்த விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

வடலூர் சத்யா ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கு உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள்  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த பெரும் திடலில் நடுவே இடையே இந்த கட்டிடம் கட்டப்பட்டால், மாதம் தோறும் நடக்கக்கூடிய பூசம் மற்றும் தைப்பூசம் நிகழ்ச்சிகளுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும் என்று மக்களும், பக்தர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இது குறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், மாதம் தோறும் பூசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இப்போது கூட நீங்கள் பூசத்திற்கு வந்தால், தமிழக அரசு கட்டக்கூடிய அந்த கட்டிடம் எவ்வளவு பெரிய இடையூறாக இருக்கும் என்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் பூசத்தன்று வருகை புரிவார்கள், இந்த பெருந்திடலில் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செல்லக்கூடிய நிலை இருந்து வருகிறது. 

இதில் குறுக்கே தடுப்பு சுவர் கட்டுவது போல இந்த கட்டிடத்தை எழுப்பி, சிறப்பாக நடக்கக்கூடிய இந்த விழாவை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக உள்ளூர் மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வள்ளலார் பெருந்திடலில் கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக, பெருந்திடலின் ஓரமாக கட்டிடத்தை கட்டிக் கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, வள்ளலார் சத்ய ஞான சபைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vadalur Vallalar Land Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->