வடலூர் அருகே பெண் விஏஓ தூக்கிட்டு தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


வடலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூர் அடுத்துள்ள ஆபத்தானபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மகள் ஜெயஸ்.ரீ 35 வயதாகும் இவர் வடக்கு சேப்ளாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீக்கு, ஓமலூர் கமலாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், ஜெயஸ்ரீ பணி தந்தை வீட்டில் தங்கி கொண்டே சேப்ளாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். பணி அழுத்தம் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மனநிலை பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த போது திடீரென ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வடலூர் காவல் நிலைய போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து, ஜெயஸ்ரீ தந்தை செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வடலூர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadakku cheppalanaththam vao suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->