நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! 
                                    
                                    
                                   Urban local election bank holiday 
 
                                 
                               
                                
                                      
                                            நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
இந்த நிலையில், வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், வங்கி கிளைகளுக்கு வரும் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற பகுதியில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள் வழக்கம்போல செயல்படும் எனவுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Urban local election bank holiday