என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன் - அமித்ஷா.!!
union minister amitsha speech in nellai booth commitee meeting
பா.ஜ.கவின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
“தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன். மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பா.ஜ.க.விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவர் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.

பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர். சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பா.ஜ.க. அழகு பார்த்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது.
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்க கூடாது என மசோதா தாக்கல் செய்தோம். இந்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்புச் சட்டம் என்று பேசுகிறார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
union minister amitsha speech in nellai booth commitee meeting