தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டிய நபர் பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


உடுமலை நாராயணகவி :

பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூவிளைவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில், கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார்.

இவர் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதினார். இவர் முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர். 'கவிராயர்" என்று அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

இவர் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி என பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 1981ஆம் ஆண்டு மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 2008ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது. இவர் பிறந்த ஊரில் தமிழ்நாடு அரசு இவரை போற்றும் வகையில் மணிமண்டபத்தை அமைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

udumalai narayana kavi birthday 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->