அரியலூர்: குழந்தையையும் கிள்ளிவிட்டு.... பா.ம.க தொண்டர்கள் கொந்தளிப்பு.. விரட்டியடிக்கப்பட்ட உதயநிதி..!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலவந்தங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

விக்னேஷின் மறைவிற்கு பல தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.7 இலட்சம் நிதிஉதவி அறிவித்தார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாகவும் தெரிவித்தார். 

இதுமட்டுமல்லாது மாணவர்கள் தற்கொலை முடிவை கைவிட வேண்டும் என்றும், மாணவர்களின் தற்கொலை செய்திகள் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக விக்னேஷின் இல்லத்திற்கு சென்ற நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து, பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். 

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நிலையில், மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் அக்கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விக்னேஷின் இல்லத்திற்கு சென்றிருந்தார். 

நீட் தேர்வு இன்று பல பிரச்சனைகளை ஏற்படுத்தி, பல உயிர்களை காவு வாங்கிய நிலையில், இந்த பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக தி.மு.க துவக்கத்தில் இருந்தது யாராலும் மறக்க இயலாதது. தி.மு.க ஒருகணம் யோசனை செய்து செயல்பட்டு இருந்தால், இன்று தமிழகத்தில் இந்த நிலைமையே வந்திருக்காது. 

இந்த விஷயத்தில் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தி.மு.கவின் மீது ஆத்திரத்தில் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வருகை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உதயநிதி வருவதற்கு முன்னதாக அங்கு வந்திருந்த திமுக நிர்வாகிகளுக்கும் - பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. 

இந்த வாக்குவாதமானது மோதல் போக்காக ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உதயநிதியின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி 500 காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 

பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விக்னேஷின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin Visit Ariyalur Vignesh House with Police Production


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->