சனாதன ஒழிப்பு! அமைச்சரா சொல்லல - நீதிமன்றத்தில் பல்டி அடித்த உதயநிதி!
Udhayanidhi Stalin sanaadhanam case chennai hc
சென்னையில் கடந்த மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்.பி ஆ.ராசா சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசியிருந்தனர்.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்த மூவரும் எந்ததகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் கோ-வாரண்டோ வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வாழ்க்கை விசாரணை செய்த நீதிபதி முன் ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டனர்.
இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி, எம்.பி ஆ.ராசா சனாதனத்தை ஒழி்க்க வேண்டுமென பேசியிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. மத சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை" என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது என்றும் உதயநிதி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
Udhayanidhi Stalin sanaadhanam case chennai hc