தட்டச்சு தேர்வில் குளறுபடி! அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தட்டச்சு தேர்வில் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த தனி நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தேர்வு நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

முன்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி நிறுவனங்களின் சங்கம் சார்பில்,  தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:

தமிழகத்தில் மட்டும் அரசு அனுமதியுடன் 3,500 தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள் இயங்குகின்றன. தட்டச்சு பயிற்சி கூடுதல் தொழில்நுட்ப தகுதி வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், தட்டச்சு தேர்வில் 75 ஆண்டுகளாக பின்பற்றிய நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவாக தட்டச்சு செய்தல் என்ற முதல் தாள் தேர்வை இரண்டாவதாகவும், கடிதம் தட்டச்சு செய்தல் என்ற இரண்டாம் தாள் தேர்வை முதலாவதாகவும் நடத்த உள்ளனர். இதை முன்கூட்டியே அறிவித்திருந்தால், அதற்கேற்றபடி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளித்திருப்போம். இந்நிலையில், பழைய முறைப்படி தேர்வு நடத்தக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். அந்த மனுவை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்கள்.

அதை விசாரணை செய்த தனி நீதிபதி சமீபத்தில், 'பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார். இந்த மனுவை எதிர்த்து, திருச்சி மாவட்ட துறையூர் தட்டச்சு நிறுவன உரிமையாளர் பிரவீன்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"நவீன பணிச்சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு புதிய முறையில் தேர்வை எதிர்கொள்வதற்கு பயிற்சி அளித்தோம். தனி நீதிபதி இதனை சரியாக பரிசீலிக்காமல், பழைய முறையில் தேர்வு நடத்த உத்தரவிட்டது ஏற்றுக்கொள்வதற்கு அல்ல. இதன் காரணமாக தனி நீதிபதி அளித்த அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைசெய்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இரண்டு வாரங்கள் இடைக்காலத் தடை விதிப்பதாகவும், செப்டம்பர் 24 மற்றும் 25ல் நடைபெற உள்ள தேர்வை நடத்தக்கூடாது என்றும் மேலும், இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தேர்வை பின்னர் நடத்தலாம்' என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

type exam cancel in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->