இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பொட்டல் நகர் பகுதியை சேர்ந்த ராமலிங்க என்பவரின் மகன் தொழிலாளி முருகராஜ் (29). இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சீவலப்பேரி சாலை மணிகுண்ட அருகே, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஒன்று முருகராஜ் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் முருகராஜ் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheelers accident in Tirunelveli


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->