ஒரு நிமிஷத்துல உயிர் பயம் காட்டிட்டிங்க போங்க...! ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள்...! அச்சத்தில் பயணிகள்...! - Seithipunal
Seithipunal


மின்சார ரெயில் சேவையான, சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றுகிறது.

இதில்,மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அவ்வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், உடனடியாக இரண்டு மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் அங்கு தவிர்க்கப்பட்டது.

மேலும், ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில இரண்டு ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விசாரணையில், 15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பயணிகள் தெரிவிக்கையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two trains on same track Passengers in fear


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->