போலீசை பார்த்து தலைதெறிக்க ஓடிய மாற்றுத் திறனாளி வடமாநிலத்தவர் - தாம்பரத்தில் கைது.!!
two north india peoples arrested for begging different able persons in tambaram
சென்னை அருகே உள்ள தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் மகாலட்சுமி நகர் சிக்னல் அருகே, கூன் விழுந்த மாற்றுத்திறனாளிகள் போல் தோற்றமளித்த ஒரு ஆணும், பெண்ணும் அங்கிருந்த வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த போலீசாருக்கு அவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர்களை பிடித்த விசாரணை செய்தபோது இருவரும் தங்கள் வேஷத்தை உதறிவிட்டு தலைதெறிக்க ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களின் பெயர் நிதின் பபன் பவார் மற்றும் தியா பவார் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் யாசகம் பெற்று பணம் சம்பாதிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two north india peoples arrested for begging different able persons in tambaram