1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: சரத் சுப்பிரமணியன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!
Two More Cases Registered Against Sharath Subramanian Over 1500 Hoax Bomb Threats
நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட அமெரிக்க வாழ் மென்பொருள் பொறியாளர் சரத் சுப்பிரமணியன் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
7 நாள் காவல் விசாரணையில் வெளியான தகவல்கள்
அவரை 7 நாட்கள் போலிஸ் காவலில் (Police Custody) எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன:
கோடிக்கணக்கில் இழப்பு: விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு மட்டும் 109 முறை போலி மிரட்டல் விடுத்ததால் அரசுக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதாரங்களை அழித்தல்: போலி மின்னஞ்சல்களை அனுப்பப் பயன்படுத்திய தனது கைபேசியை அமெரிக்காவிலேயே தூக்கி வீசி எறிந்து விட்டதாகச் சரத் சுப்பிரமணியன் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரிடம் தொடரும் விசாரணையில், மேலும் பல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்ட மிரட்டல்கள் தொடர்பான பின்னணி விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Two More Cases Registered Against Sharath Subramanian Over 1500 Hoax Bomb Threats